வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (15/03/2018)

கடைசி தொடர்பு:11:28 (16/03/2018)

தமிழக பட்ஜெட் 2018 -19 : ’நிதி ஒதுக்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது!’ #TNBudget2018 #LiveUpdates

Tamilnadu Budget 2018 Updates:

 

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.சுமார் 2.30 மணி நேரம் பட்ஜெட் உரை  நிகழ்த்தியுள்ளார்.

தமிழக பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்...

*தமிழக அரசின் பட்ஜெட்டில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 27, 205 கோடி ஒதுக்கீடு

*இந்த பட்ஜெட்டில் புதிய வரி ஒன்றும் இல்லை.

* 14வது நிதிக்குழு காலத்தில் 89% உயர்வை மட்டுமே தமிழ்நாடு பெற்றுள்ளது.  கர்நாடகா 155.14%, மகாராஷ்டிரா 148.93%, குஜராத் 137.70%, கேரளா 149.82%  உயர்வுகளை பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி ஒதுக்குவதில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

*மத்திய அரசிடம் தமிழகம் சிறப்பு உதவி மானியம் வழங்கக் கோரியது. ஆனால் இதுவரை மத்திய அரசு  பதில் அளிக்கவில்லை. 

*2018-19 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் ரூ.1,12,616 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

*மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் பாதிப்பு.

*மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

*முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்வு

*எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.587.50 கோடி ஒதுக்கீடு.

*ரூ.21.43 கோடி மதிப்பீட்டில் 7,000 ஏக்கரில் மரங்கள் நடப்படும்.

*விலையில்லா சேலைகள், வேட்டிகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.490.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*ரூ.28.23 கோடி செலவில் 20 இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டிடம் கட்டப்படும். 

*உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.

*பிரசிடன்சி மற்றும் ராணி மேரி கல்லூரிகளை புதுப்பிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு. *போக்குவரத்து கழகங்களுக்காக 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

*குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு. 

*பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு.

*உயர்கல்வித்துறைக்கு ரூ.4,620.20 கோடி நிதி ஒதுக்கீடு. 

*நிதி அயோக் வெளியிட்ட மாநிலங்களுக்கான சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு 3ம் இடத்தில் உள்ளது. 

*2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது

*சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.750 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும் 1000 கோடி ரூபாயை துணைக் கடனாகவும் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

*தகவல் தொழில் நுட்பத்தில் ’Tamilnadu Fibre Net Corporation’ என சொல்லப்படும் தமிழ்நாடு இழை வலையமைப்புக் கழகத்தின் மூலம் பாரத் நெட் திட்டம் செயல்ப்படுத்தப்படும். தமிழ் நெட் திட்டமும் செயல்படுத்தப்படும். தொழில்நுட்பத் துறைக்கு மொத்தமாக 158.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

*அத்திக்கடவு அவினாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். அதற்கு 1789 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 

*போக்குவரத்து துறைக்கு மொத்தமாக 2,717.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

*நெடுஞ்சாலை துறைக்கு மொத்தமாக 11,073.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

*சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கு 649.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது

*இந்த பட்ஜெட்டில் காவல்துறைக்கு 7877.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

*மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500மீட்டர் தொலைவில் மதுபானக்கடைககை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் வரவு குறைந்துள்ளது. 

*சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.540.66 கோடி ஒதுக்கீடு

விவசாயம்..

*இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு. 

*துவரை, உளுந்து, பச்சைப் பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.

*விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.

*கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 8,000 கோடிக்கு புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும்.

*இந்த நிதியாண்டில் ஒருகோடியே பத்து லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியை அடைய இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

*சென்னை கிண்டியில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அம்மா பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.

 *ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும்.

* கடலூர் மாவட்டம் மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும்.

*தோவாளையில் மலர் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும். 

பெண்களுக்கு....

 *டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டதில் ரூ.12,000த்தில் இருந்து ரூ.18,000 ஆக நிதி உயர்வு.

*வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்கு பயனளிக்கும் விதமாக அரசு செலவில் மகளிர் விடுதி கட்டித்தரப்படும். 

*கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம்.

*திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.724 கோடி ஒதுக்கீடு. 

*பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க ரு.250 கோடி ஒதுக்கீடு. 

*பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க ரு.250 கோடி ஒதுக்கீடு. 

*மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க ரூ,60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி ஒதுக்கீடு.

சுகாதாரத்துறைக்கு,..

*சுகாதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு.

*மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2வது மாநிலம் தமிழகம் திகழ்கிறது.

*முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி  ஒதுக்கீடு.

*ரூ.24 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும். 

*ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்.

*அரசு மருத்துவமனைகளில் ரூ.66.50 கோடியில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் வழங்கப்படும்.

*ரூ.24 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும். 

தமிழ்மொழி...

*தமிழ்மொழி விரிவாக்க மையம் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் உருவாக்கப்படும்.

*தமிழ்மொழி விரிவாக்க மையத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.

*ரூ.1 கோடி மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.

*நலிந்த தமிழ் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.1.500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். 

ஜெயலலிதா..

*ஜெயலலிதா நினைவு மண்டபம் மெரினாவில் ரூ.50.80 கோடியில் அமைக்கப்படும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்படும். 

*ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
*தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ. 1,03,219 ஆக இருந்தபோதிலும் தமிழகத்தில் ரூ. 1,53,263 ஆக உள்ளது   

*காவல்துறை உள்கட்டமைப்புக்காக ரூ.217 கோடி ஒதுக்கீடு ; இணைய வழி குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இணைய வழி குற்றத்தடுப்பு காவல்    நிலையம் அமைக்கப்படும்.

*ஏழை குடும்பங்களுக்கு 3 லட்சம்  இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.

*மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு.*தென் சென்னையில் ரூ.1,245 கோடியில் வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

*தமிழகத்தில்  26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்கத் திட்டம் ரூ.920 கோடியில் செயல்படுத்தப்படும். 

*2018 - 2019 ஆண்டில் மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 1,76,251 கோடி ரூபாயாக இருக்கும். 

*ஜி.எஸ்.டி யால்  தமிழகத்துக்கு தற்காலிக பாதிப்பு. 

*அரசு தொழிற்கூடங்களில் உள்ள குறைபாடுகளை நீக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு. 20 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும்.

*2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  

*பன்னீர்செல்வம் உரையைத் தொடங்கியதும் தி.மு.க உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

தமிழக பட்ஜெட் 2018

*2018-19-ம் நிதியாண்டின் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் தொடங்கியது. பேரவையில் பட்ஜெட்டை தாக்கல்செய்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

தமிழக பட்ஜெட் 2018

*தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர், கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம், பெரும்பான்மை இல்லாத முதலமைச்சர் பழனிசாமி அரசு, பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என்று தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பட்ஜெட் 2018

 *தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார்.

தமிழ்நாடு பட்ஜெட்

 *மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் அச்சிடப்பட்ட பெட்டியுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தார்  ஓ.பன்னீர்செல்வம்.
 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்குறித்த அறிவிப்பை கடந்த 7-ம் தேதியன்று, சட்டசபைச் செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்தார். அதன்படி இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை காலை 10:30 மணிக்கு துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல்செய்கிறார்.

சட்டசபையில் நிதிநிலை அறிக்கை படித்து முடித்த உடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவு பெறும். அதன் பிறகு சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை விவாதிக்க, பேரவையின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் அடங்கிய அலுவல் கூட்டம், சபாநாயகர் தனபால்அலுவலகத்தில் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் ஆகியவற்றை தமிழக அரசு எதிர்க்கொள்ள உள்ள நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பல புதிய திட்டங்கள் இடம்பெறக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசு அலுவலர்கள்,ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ஏற்கபட்ட நிலையில் இதனால் அரசிற்கு கூடுதல் நிதிசுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிதிசுமையை சரிசெய்ய வரிகள் உயர்வு, புதிய வரிகள் போன்றவை அறிமுகபடுத்தபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க