இமயமலையில் சாதுக்களுக்கு ரஜினிகாந்த் அளித்த பிரமாத விருந்து!

டிகர் ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் முகாமிட்டுள்ளார். ரிஷிகேஷில் பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதோடு, ஆன்மிகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். தனிப்பட்ட ஆன்மிகச் சுற்றுப்பயணம் என்பதால் இங்கு வைத்து அரசியல் பேச வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சாதுக்களுக்கு ரஜினி விருந்து

இந்நிலையில், ரிஷிகேஷில் தங்கியுள்ள ஆன்மிகவாதிகள், சாதுக்களுக்கு ரஜினிகாந்த் இன்று மதிய விருந்து வழங்கினார். தயானந்த சரஸ்வதி ஆஷ்ரமத்தில் நடைபெற்ற மதிய விருந்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்று தன் கையால் சாதுக்களுக்கு விருந்து பரிமாறினார். விருந்து தொடங்குவதற்கு முன்னதாகச் சாதுக்கள் ரஜினிகாந்த்தை வாழ்த்தினர். விருந்தில் 500-க்கும் மேற்பபட்ட சாதுக்கள் பங்கேற்றனர். 

விருந்து குறித்து ரஜினிகாந்த் கூறுகையில், ''ரிஷிகேஷ் எனக்கு மிகவும் பிடித்த இடம். அடிக்கடி இங்கு வருவது உண்டு. ஆன்மிகத்தில் எனக்குள்ள நாட்டம் உங்கள் அனைவருக்கும் தெரியும். கடந்த இரு ஆண்டுகளாகப் பல்வேறு காரணங்களால் என்னால் இங்கு வர முடியவில்லை. தற்போதுதான் அதற்கான காலம் கனிந்தது. எனது வருகைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த மண்ணை நான் நேசிக்கிறேன். இங்கு வருவதால் எனக்குள்ளும் ஓர் உற்சாகம் பிறக்கிறது. புத்துணர்வு பெற்றவனாக உணர்கிறேன்'' என்று கூறினார்.

அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிடவும் நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிட தயங்குகிறீர்களே என்ற கேள்வியைச் செய்தியாளர்கள் கேட்டபோது, ''மீண்டும் மீண்டும் அரசியலுக்குள்ளேயே வருகிறீர்களே என்று கூறி  ரஜினிகாந்த் பேட்டியை முடித்துக்கொண்டார்.  

ரஜினிகாந்த் தமிழகம் திரும்பியதும் அரசியல் குறித்து முக்கிய முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!