தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி

தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில்,     "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையினால், அப்பகுதியில் காற்று, நிலத்தடி நீர் ஆகியவை கடுமையாக மாசடைந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் கடந்த பிப்ரவரி முதலே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், தற்போது எங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை 

ஆகவே, வரும் மார்ச் 17 மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை அதே இடத்தில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே, மார்ச் 17 மாலை ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உரிய விளக்கம் பெற்று, பின்னர் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர் .  அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், மார்ச் 17-ம் தேதி போராட்டம் நடைபெறும் பட்சத்தில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய இயலாது. எனவே,  மார்ச் 24 -ம்  தேதி அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி-க்கு உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!