வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (16/03/2018)

கடைசி தொடர்பு:10:36 (16/03/2018)

இன்று தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

பத்தாம் வகுப்பு


இன்று தொடங்கும் பொதுத்தேர்வு, ஏப்ரல் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், 36 ஆயிரத்து 649 பேர் தனித் தேர்வர்கள். இதற்காக, 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 305 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 820 மாணவர்கள், 8 ஆயிரத்து 694 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 514 பேர் எழுதுகின்றனர். புதுச்சேரியில் 38 மையங்கள், காரைக்காலில் 13 மையங்கள் என மொத்தம் 52 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. மேலும், தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களைக் கண்காணிக்க புதுச்சேரியில் 5 பறக்கும் படைகளும், காரைக்காலில் 2 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களாக மட்டும் 991 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு அறைகளில் காலை 10 மணி முதல் 10.10 மணி வரை, 10 நிமிடம் வினாத்தாள்களை மாணவர்கள் படிக்கவும், 5 நிமிடம் விடை விபரங்களைச் சரிபார்க்கவும் ஒதுக்கப்படுகிறது. தேர்வுகள், காலை 10.15 முதல் 12.45 வரை, 2.30 மணி நேரம் நடைபெறும். மாணவர்கள்,  கால்குலேட்டர், செல்போன் போன்ற உபகரணங்களை தேர்வறைக்குள் எடுத்துச்செல்லக் கூடாது, பெல்ட் அணிந்து செல்லக் கூடாது என்றும், ஆசிரியர்கள் தேர்வறைக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது என்றும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல, அனைத்துத் தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க