`ரஜினியும் கமலும் வித்தியாசமானவர்கள்' - நடிகர் பிரபு கலகல பேட்டி

அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் கமல், ரஜினி இருவரையும் ஒரே சமமாகத்தான் பார்கிறேன் என வேலூரில் நடிகர் பிரபு பேட்டி.

பிரபு

வேலூரில் பிரமாண்டமாகக் கல்யாண் ஜூவல்லரி திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்தார் நடிகர் பிரபு. திறப்பு விழா முடிந்ததும் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, உங்கள் நெருங்கிய நண்பர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துள்ளனர் இவர்களில் யாருக்கு உங்கள் ஆதரவு என்று கேட்டனர்.

அதற்கு நடிகர் பிரபு, ரஜினி கமல் இருவருமே எனது நெருங்கிய குடும்ப நண்பர்கள். இருவரையும் நான், ஒன்றாகத்தான் பார்க்கிறேன். அரசியலில் இறங்கினார்கள் என்பதற்காக இருவரையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. எனக்கு இருவருமே சமம்தான் அவர்களை நான் அப்படித்தான் பார்கிறேன். இருவருமே என்னை பிரசாரத்துக்கு அழைத்தால் நான் செல்வேன். இருவருக்கும் பிரசாரம் செய்வேன். எனது ஆதரவு இருவருக்கும் எப்போதும் இருக்கும். ரஜினி, கமல் இருவருமே திறமையானவர்கள்; வித்தியாசமானவர்கள்.

அவர்கள் எடுக்கும் முடிவு நல்வழியில் இருக்கும் என்று நம்புகிறவன் நான். இருவருமே அரசியலில் பெரிய அளவில் வளர்ச்சிப் பாதையில் வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதற்காக என் அப்பாவை வேண்டுகிறேன். அப்பாவின் ஆசையும் அதுதான். தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பாரம்பர்யமான ஒன்றுதான். அதில் எந்த வேறுபாடும் இல்லை. இருவரும் தமிழக மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். ரஜினி, கமல் இருவரும் என்னை பிரசாரத்துக்கு அழைத்தால் எப்போதும் செல்வேன்'' என்றார் நடிகர் பிரபு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!