வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (16/03/2018)

கடைசி தொடர்பு:17:25 (16/03/2018)

`நீங்கள் ஏன் விமர்சிக்க மறுக்கிறீர்கள்' - ரஜினி, கமலுக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி

''மத்திய அரசு, பலவிதமான மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. ரஜினி, கமல் ஆகியோர் ஏன் இதுபற்றி கருத்துக் கூற மறுக்கிறார்கள்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார்.

கே.பாலகிருஷ்ணன்

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், ‘மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமான நீரவ் மோடி, வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தானியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு துடிக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றி, இங்குள்ள விவசாயத்தை முற்றிலுமாக அழித்து, தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற மத்திய அரசு துடிக்கிறது. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள்குறித்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் ஏன் கருத்துக் கூற மறுக்கிறார்கள்? இவர்கள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்” என கேள்வி எழுப்பினார்.