வாடிக்கையாளர்களை தவிக்கவிட்ட வோடோஃபோன்! - இது தென்னிந்திய பிரச்னை | Vodafone network down in Chennai regions 

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (16/03/2018)

கடைசி தொடர்பு:16:00 (16/03/2018)

வாடிக்கையாளர்களை தவிக்கவிட்ட வோடோஃபோன்! - இது தென்னிந்திய பிரச்னை

ஏர்டெல் சேவையைத் தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி நிறுவனமான வோடோஃபோன் நெட்வொர்க் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

வோடோபோன்

கடந்த மாதம் இந்தியாவின் முன்னணி மொபைல் நெட்வொர்க்கான ஏர்செல் நிறுவனத்தின் சேவை முடங்கியது. கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால், இந்தச் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் வேறு நெட்வொர்க்களுக்கு மாறிக்கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தியது. இதையடுத்து, ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடோஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மாறிவருகின்றனர். இது இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், வோடோஃபோன் சேவையில் சிக்கல் எழுந்துள்ளது. இன்று சிக்னல் கிடைக்காததால் மற்ற நெட்வொர்க்குடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இதேபோல் இணைய சேவைகளும் சரியாகக் கிடைக்கவில்லை. இதேபோல் இணைய சேவைகளும் சரியாகக் கிடைக்கவில்லை. 

குறிப்பாக, தென்னிந்தியாவில் இந்தப் பிரச்னை எழுந்துள்ளதாக இணையத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கவே, தற்போது அதற்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "இது ஒரு தற்காலிகமான ஒன்றுதான். பிரச்னையைச் சரி செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் சரி செய்யப்பட்டவுடன் வழக்கம்போல் மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2 நாள்களாக ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வோடோஃபோன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க