காவிரி மேலாண்மை வாரியம் கோரி தொடர் ரயில் மறியல்! மார்க்ஸிஸ்ட் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியான ரயில் மறியல் போராட்டங்கள் நடத்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இக்கட்சியின் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றுகூடி இந்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ’6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் சுய ஆதாயத்துக்காக, காவிரி மேலாண்ம வாரியம் அமைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மறுக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வராமல் தடுப்பதற்காகக் கண் துடைப்பாகவே 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டத்தை டெல்லியில் மத்திய அரசு நடத்தியது. உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதிவியை ராஜினாமா செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 5-ம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்' எனத் தெரிவித்துள்ளார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!