வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (16/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (16/03/2018)

`ஆர்.கே.நகர் தேர்தலில் சிங்கம் எங்கே போனது?’ ஜெயக்குமாரை வறுத்தெடுத்த தினகரன்

மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கியுள்ள தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு வந்த கூட்டம் தானாக வந்ததா திரட்டப்பட்டதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நாங்கள் ஒன்றும் ஆளும் கட்சியல்ல, மக்கள் எங்கள்மீது பாசம் வைத்திருக்கிறார்கள். கூட்டத்துக்கு வந்த வெளியூர் கட்சியினருக்குப் பல கிராம மக்கள் சாப்பாடு போட்டுள்ளார்கள். தமிழக பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி-யில் எவ்வளவு நஷ்டம் என்று சொல்லவில்லை. ஓட்டுப் போடவில்லை என்று ஆளும் தரப்பினால் ஆர்.கே.நகர் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

தினகரன்

பிரதமருடன் நெருக்கமாக இருக்கும் ஓ.பி.எஸ் மக்களுக்கு நல்லது செய்ய மறுப்பது ஏன். புதிய பேருந்துகள் வாங்குவாதல் யாருக்கு லாபம். கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி அளவுக்குத் தமிழகத்துக்கு  கடன் உள்ளது.  இரட்டை இலையை வைத்து மட்டுமே மக்களை ஏமாற்ற முடியாது. இது இவர்களின் கடைசி பட்ஜெட். அடுத்த பட்ஜெட்டை நாங்களே தாக்கல் செய்வோம்'' என்றவரிடம், 'உங்களை சிங்கத்தின்மீது அமர்ந்துள்ள கொசு என்று அவர்கள் சொல்கிறார்களே?' ''உன்மையான சிங்கம் என்பது நாங்களே. இப்போது சொல்கின்ற சிங்கம் ஆர்.கே.நகர் தேர்தலில் எங்கே போனது. ஆட்சியில் இருப்பதாலே அசிங்கங்கள் எல்லாம் சிங்கமாக மாறிவிடாது. பயத்தினாலே எங்கள் கொடியை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்று உள்ளனர். இந்த செயல்கள் எல்லாம் சிங்கம் பண்ணக்கூடிய வேலை இல்லை குள்ளநரி செய்யக்கூடிய வேலையே'' என்றார்.

'ஆரம்பித்துள்ளது தனிக்கட்சியா அமைப்பா?' என்றதற்கு, ''இது தனிக்கட்சி அல்ல, அமைப்புதான். ஏற்கெனவே அம்மா அணி என்று இருந்தோம். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாகச் செயல்படுவோம். இது இடைக்காலமாக இரட்டை இலை வழக்கு முடியும் வரை  தொடர உள்ளோம். இது அமைப்பே தவிர. புதிய கட்சி அல்ல'' என்றார்.

'உங்கள் அமைப்பின் பெயரில் திராவிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதற்கு என்ன காரணம்’ என்ற கேள்விக்கு, ''அப்படி சும்மா சொல்கிறார்கள். அம்மா என்பதே திராவிடம்தான். அவர்தான் சமூகநீதிக்காகத் திராவிடர் கழக வீரமணி சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை வழங்கினார். அம்மா என்பதற்குள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். திராவிடம் அனைத்தும் உள்ளது'' என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க