`சர்வதேச அணி அந்தஸ்து' - நேபாள் அணிக்குக் குவியும் வாழ்த்துகள்! | Nepal have achieved ODI status for the first time in their history

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (16/03/2018)

கடைசி தொடர்பு:21:20 (16/03/2018)

`சர்வதேச அணி அந்தஸ்து' - நேபாள் அணிக்குக் குவியும் வாழ்த்துகள்!

ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சர்வதேச அணி என்ற அந்தஸ்தை நேபாள் பெற்றுள்ளது. 

நேபாள்

உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஜிம்பாவேயில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்றைய போட்டியில், பப்புவா நியூ கினி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேபாள் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், ஐ.சி.சி-யின் ஒருநாள் போட்டிக்கான சர்வதேச அணி அந்தஸ்தை நேபாள் பெற்றது. வரும் 2022-ம் ஆண்டு வரை அந்த அணிக்குச் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அணி அந்தஸ்தை நேபாள் பெற மற்றோர் அணியான நெதர்லாந்து காரணமாக இருந்தது. சர்வதேச ஒருநாள் அணி அந்தஸ்து பெறும் போட்டியில் நேபாளுடன், ஹாங்காங்கும் இருந்தது. ஆனால், நேற்று நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாங்காங் தோல்வியடையேவே, அந்த வாய்ப்பு மங்கியது. 

இதற்கிடையே, சர்வதேச அணி அந்தஸ்தை பெற்றுள்ளதால் அந்த அணி வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் சந்தீப் லமிச்சான், கேப்டன் பாரஸ் கட்கா உள்ளிட்டோர் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். இதேபோல் நேபாள் அணிக்குப் பிரபல கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இன்சமாம்-உல்-ஹக், வாக்கர் யூனிஸ், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் கிளார்க் உள்ளிட்டோர் இதற்கு வரவேற்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க