வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (17/03/2018)

கடைசி தொடர்பு:09:01 (17/03/2018)

இரவு முதல் சென்னையில் சாரல் மழை!

சென்னையில், நேற்று இரவு முதல் மிதமான சாரல் மழை பெய்துவருகிறது.

சென்னையில் மழை

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தொடர்ந்து நிலவிவருவதால், வட மாவட்டங்களில்  24 மணிநேரத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்துவருகிறது. வடசென்னை, ஜாபர்கான்பேட்டை, மைலாப்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில், இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இன்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனினும், இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையால், மீனவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.