`நடராசன் மருத்துவமனையில் அனுமதி' - பரோலில் வருகிறார் சசிகலா! | sasikala's husband Nadarasan admitted at hospital due to illness

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (17/03/2018)

கடைசி தொடர்பு:21:58 (17/03/2018)

`நடராசன் மருத்துவமனையில் அனுமதி' - பரோலில் வருகிறார் சசிகலா!

சசிகலாவின் கணவர் ம.நடராசனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நடராசன்

சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனால் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக நடராசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, நடராசனைக் காண சசிகலா மீண்டும் பரோலில் வரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.