கே.சி.பழனிசாமி நீக்கம்..! அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் | TN minister Kadambur Raju explain about K.C.Palanisamy expelled issue

வெளியிடப்பட்ட நேரம்: 05:40 (18/03/2018)

கடைசி தொடர்பு:05:40 (18/03/2018)

கே.சி.பழனிசாமி நீக்கம்..! அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து  ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஒருங்கிணைப்பு குழுவிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாகக் கருத்து தெரிவித்ததால்தான் கே.சி.பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளார் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கூட்டுறவு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் முதன்முதலாக கூட்டுறவுத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் எதிரிகளும் துரோகிகளும் களத்தில் இறங்க உள்ளனர். இதில், துரோகிகள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடலாம். இதில் புதிய தேர்தல் வியூகம் அமைத்து ஒற்றுமையாக செயல்பட்டு பதவிகளைக் கைப்பற்ற வேண்டும்' என பேசினார்.  

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பவர், அந்தக் கட்சியின் தலைமையின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டுமே தவிர தன்னிச்சை கருத்து தெரிவிக்க கூடாது. தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க, கே.சி.பழனிச்சாமி  ஓன்றும் கட்சியின் பொதுச்செயலாளரோ ஒருங்கிணைப்பாளரோ அல்ல.

காவிரி மேலாண்மை குறித்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஒருங்கிணைப்பு குழுவிடம் ஆலோசித்த பின், கே.சி.பழனிச்சாமி கருத்து தெரிவித்து இருக்கலாம். அவரவர் தனிப்பட்ட முறையில் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கட்சியின் கொள்கை முடிவுகளை ஆளாளுக்கு எடுக்கக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மத்திய பா.ஜ.க ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறிய இயக்கம் அ.தி.மு.க' என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க