வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (18/03/2018)

கடைசி தொடர்பு:12:39 (18/03/2018)

”நடராசனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!” மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சசிகலாவின் கணவர், நடராசன் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

நடராசன்

சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்குச் சமீபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரின் உடல் நலம் தேறியுள்ளதாகவும் இனி எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துமனையில் நலமாக உள்ளது போன்ற புகைப்படங்களும் வெளியாகின.

தற்போது அவருக்கு மீண்டும் உடல் நலபாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரின் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இது குறித்து மருத்துவமனை நிர்வாகமே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது, அதில் ’நடராசன், நோய்த்தொற்று காரணமாக கடந்த 16/03/2018 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. தொடர்ந்து அவரின் நிலை மோசமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்’  என குறிப்பிடப்பட்டிருந்தது.