`கமல் சார் கட்சி ஆரம்பிச்சது நாலு நாளைக்கு முன்னதான் தெரியும்’ - நிர்வாகிகளைத் திகைக்க வைத்த நாட்டுப்புற பாடகி

மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நேற்று (17.3.2018) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாட்டுப்புற பாடகி ஒருவர், கமல் சார் கட்சி ஆரம்பிச்சதே நாலு நாளைக்கு முன்னாடி எனக்கு தெரி யும் என கூறி அனைவரும் வியப்பில் ஆழ்த்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின்  ஆலோசனைக் கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் ஆற்றுபாலம் பகுதியில் உள்ள சரோஜினி ஹாலில் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர் அருணாச்சல்ம் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மட்டு மல்லாமல் மக்கள் நீதி மய்யத்தில் புதிதாக இணைய விருப்பம் உள்ளவர்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் பேசிய கிராமப்புற பெண் ஒருவர் ‘நான் நாட்டுப்புற பாடகி. கமலஹாசன் சார் கட்சி ஆரம்பிச்சது நாலு நாளைக்கு முன்னாடி எனக்கு தெரியும். உடனடியா இதுல சேர்ந்து ஏதாவது நல்லது பண்ணணும் முடிவெடுத்து இங்க வந்தேன்.” என தெரிவித்ததும் ஒட்டுமொத்த கூட்டமும் திகைத்தது. இவர் மிகவும் குக்கிரா மத்தைச் சேர்ந்தவர். திகைப்பில் உறைந்திருந்தவர்களை தட்டியெழுப்பும் விதமாக விளக்கம் கொடுத்தார் உயர்நிலைக்குழு உறுப்பினர் அருணாச்சலம். ‘என்னதான் தொழில் நுட்பங்களும் வளர்ந்தாலும் குக்கிராமங்களுக்கு எல்லா செய்திகளும் முழுமையாக போய் சேர்றதில்லை. இங்குள்ள மக்களோட வாழ்க்கை சூழலும் நெருக்கடியில இருக்கு. இதைதான் கமல் சார் முன்னாடியே கணிச்சி சொன்னார். ‘வாட்ஸ் அப், பேஸ் புக்ல மட்டும் கட்சியை வளர்த்த முடியாது. குக்கிராமங்களுக்கு போயி, மக்களோட மக்களா கலந்து இவங்களோட பிரச்னைகளை தீர்க்க நாம முயற்சி பண்ணனும் சொல்லிக்கிட்டே இருக்கார்.” என தெரிவித்தார்.    

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!