முயன்று பாருங்களேன் ... எளிய மருந்து, எல்லா இடத்திலும்! - குடிநீர் | How much water do we need to drink a day?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2018)

கடைசி தொடர்பு:06:00 (19/03/2018)

முயன்று பாருங்களேன் ... எளிய மருந்து, எல்லா இடத்திலும்! - குடிநீர்

தூய்மையான நீரைவிட எளிய மருந்து இல்லை என்று தான் நமது பாரம்பர்ய மருத்துவமுறைகள் கூறுகின்றன. தூய்மையான நீரை தகுந்த இடைவெளி விட்டு பருகி வந்தால் பல நோய்கள் வராமல் இருந்து விடும். அதிலும் இப்போது வரக்கூடிய கடும்கோடைக் காலத்தில் குடிநீர் அவசியம் மிக மிகத் தேவையாகிறது. நீரின் நன்மைகள் தெரியுமா? 

குடிநீர்

நீர் அதிகம் குடித்தால் சிறுநீரகத்தில் கல் உண்டாவதில்லை. சிறுநீர்க் கடுப்பு உருவாவதில்லை. நீர்ச்சத்தால் உடலின் சூடு நிலையாகி சோர்வை தடுக்கிறது. அதிக நீர் குடிப்பதால் கோடைக்காய்ச்சல் குணமாகிறது. நீர் அடிக்கடி குடிப்பதால் சிறுநீரகத்தில் நோய்த்தொற்று உண்டாவதில்லை. தொண்டைப்புண், சுவாசப்பாதை தொற்று, இருமல், சளி,  வயிற்றெரிச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் இவைகளெல்லாம் அதிக நீர் குடிப்பவர்களுக்கு வரவே வராது. மலச்சிக்கல் வராது. ரத்த ஓட்டத்தை சீராக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும். எடை குறையும்; தலைவலி குறையும். கொழுப்புக் கரையும். சருமம் மினுமினுக்கும். அதுமட்டுமா? உடலின் நச்சுக்கள் யாவும் வெளியாகி பல நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது நீர். 

நீர்

தூய்மையான நீரை அப்படியே குடிப்பதுதான் நல்லது. உடல் எடைக்கு ஏற்ப 8 முதல் 12 குவளைகள் வரை நீர் அருந்த வேண்டும் என மருத்துவம் கூறுகிறது. ஒரேடியாக குடிப்பதை விட, கொஞ்ச கொஞ்சமாக வாயில் விட்டு விழுங்கி குடிப்பதே நல்லது. உடல் உழைப்பின்போதும், உடல் நலம் குறைந்திருக்கும்போதும் அதிகமான நீரைக் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் அதிகம் நீர் குடிப்பது நல்லது. மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பவர்கள் அவரிடம் ஆலோசனைக் கேட்டுவிட்டு நீர் குடிப்பது நல்லது. அதே சமயம் நீரின் அளவு அளவுக்கு அதிகமாக கூடிவிடுவதும் தவறு. பொதுவாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் நீர் அதிகம் குடிப்பது நல்லதே.