வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (19/03/2018)

கடைசி தொடர்பு:08:35 (19/03/2018)

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்..

தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்காக இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை.

கடந்த 15-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்தது. அதில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான
ஓ.பன்னீர்செல்வம் இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பிறகு அன்று மாலையே நடைபெற்ற சிறப்புக்
கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரத்துடன் இன்றைய சட்டப்பேரவை துவங்குகிறது. இதைத் தொடர்ந்து காவிரி விவகாரம், விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றைக் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளனர் இதற்கு மத்திய அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர். இந்தக் கூட்டம் வரும் 21-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. கூட்டத்தின் இறுதி நாளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க உள்ளார்.