குரங்கணியில் தீ வேகமாகப் பரவ இதுதான் காரணம்! - சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ குறித்து சட்டப்பேரவையில் இன்று, தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தேனி, குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்றத்துக்குச் சென்றவர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீவிபத்து பொதுமக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தீ விபத்துக்குப் பிறகு, இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில்,  காட்டுத்தீயில் சிக்கி இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தீவிபத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதில், காட்டுத்தீ பற்றி இந்திய வனத்துறை முன்கூட்டியே எச்சரித்ததாகவும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை எனக் கூறினார். மேலும், குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வன ஆய்வு மையத்துடன் வனத்துறையினர் செல்போன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `அனுமதி பெறாமல் மலையேற்றத்துக்குச் சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய சுக்குநாரி புற்கள் அதிகம் இருந்ததால் தீ வேகமாகப் பரவியிருக்கிறது எனக் கூறினார். தொடர்ந்து, பயணிகளைக் காட்டுக்குள் அனுமதித்த அதிகாரிகள் மீதும், அவர்களை அழைத்துச் சென்ற ட்ரெக்கிங் கிளப் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!