உளுந்து விலை சரிவால் நெல்லுக்கு மாறிய விவசாயிகள்! | Farmers facing Price decline problem

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (19/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (19/03/2018)

உளுந்து விலை சரிவால் நெல்லுக்கு மாறிய விவசாயிகள்!

தஞ்சை மாவட்டத்தில், போர்வெல்லை நம்பி கோடைப் பருவத்தில் உளுந்து சாகுபடிசெய்யும் விவசாயிகள் பலர், இந்த ஆண்டு உளுந்துக்குப் பதிலாக நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

விவசாயிகள்

தற்போது, அம்மாப்பேட்டை, பூண்டி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இனிவரும் நாள்களில், இது 45 ஆயிரம் ஏக்கரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பல விவசாயிகள், கோடைப் பருவத்தில் உளுந்து சாகுபடிசெய்வதைத்தான் வழக்கமாக வைத்திருந்தார்கள். இந்த ஆண்டு உளுந்துக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், உளுந்து சாகுபடி செய்யத்தான் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், உளுந்து ஒரு கிலோவுக்கு 45-50 ரூபாய்தான் விலை கிடைக்கிறது. அடுத்த சில மாதங்களிலும் இதே நிலைதான் நீடிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல் சாகுபடியில் இறங்கியுள்ளார்கள்.