'லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடக அமைச்சரவை!

கழுத்தில் லிங்கம் அணிந்து சிவனை வழிபடுபவர்கள், லிங்காயத் பிரிவினர். இந்தப் பிரிவு, கி.பி 12 - ம் நூற்றாண்டில், பசவப்பா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இது, கர்நாடகாவில் தோற்றுவிக்கப்பட்டாலும் இந்தப் பிரிவினர் கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் வசித்துவருகின்றனர். 

லிங்காயத்

 

தாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, தங்களை தனிச் சிறுபான்மை மதமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள். அதன் முக்கிய நிகழ்வாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடகாவில் உள்ள நேரு மைதானத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி, மாபெரும் பேரணி நடத்தினார்கள். 

சித்தராமையா

இறுதியாக, லிங்காயத் சமூகத் தலைவர்களும் மடாதிபதிகளும் இணைந்து, முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து, புத்த, சீக்கிய மதங்களைப் போல தங்களையும் தனிச் சிறுபான்மை மதமாக அறிவிக்கக் கோரி மனு கொடுத்தனர். முதல்வர் சித்தராமையாவும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று கர்நாடக அமைச்சரவை லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அங்கீகரித்து, மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!