வெளியிடப்பட்ட நேரம்: 06:27 (20/03/2018)

கடைசி தொடர்பு:12:03 (20/03/2018)

பெசன்ட் நகர் வந்தது நடராசன் உடல் - ஜெ.தீபக் அஞ்சலி!

சசிகலாவின் கணவர் நடராசன் உடல், பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. 

நடராசன்

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். இதையடுத்து, அவரின் உடல் எம்பாமிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பாமிங் செய்த பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் உடல் கொண்டுவரப்பட்டது. இன்று காலை 11 மணி வரை பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் அவருக்கு அஞ்சலிசெலுத்தவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நடராசன்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பரோல் கோரப்பட்டுள்ளது. நடராசன் இறப்புச் சான்றிதழ் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பரோல் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க