நடராசன் மறைவு! - நல்லகண்ணு, ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி | sasikalas husband nadarasan passed away today morning

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (20/03/2018)

கடைசி தொடர்பு:12:37 (20/03/2018)

நடராசன் மறைவு! - நல்லகண்ணு, ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி

நடராசன்

சசிகலாவின் கணவர் நடராசன், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அதனால், சசிகலா இன்று பரோலில் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடராசன் உடலுக்கு எம்பாமிங் முடிந்த பின், சென்னை பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல், காலை 7 மணி முதல் 11 மணி வரை வைக்கப்படும். அதன்பின், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்திற்குக் கொண்டுசெல்லப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அதையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணி அளவில் காலமானார். 

நடராசன் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 'நடராசனின் மறைவு, மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்குப் பேரிழப்பு' என திருமாவளவன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நடராசன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

இன்று காலை சென்னை பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடராசனின் உடலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  அஞ்சலி செலுத்தினார். 'புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராசன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோதே தமிழ்மொழிக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது உணர்வை வெளிப்படுத்தியவர். கலைஞர் மீது அன்பு கொண்டவராகவும், திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக விளங்கியவர். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்க கூடிய அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கள்' என்று தெரிவித்தார்.  

வைரமுத்து

'நடராசனின் மறைவு அவரது குடும்பத்திற்கு, திராவிட இயக்கங்களுக்குப் பேரிழப்பு, அவரது நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் இருக்கும்' எனத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். மேலும், நல்லக்கண்ணு, தா.பாண்டியன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தா.பாண்டியமன்