வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (20/03/2018)

கடைசி தொடர்பு:13:21 (20/03/2018)

இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி!

ரஜினி

இமயமலை ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார்.

கடந்த 10-ம்தேதி இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் புறப்பட்டார் ரஜினி. முதலில் இமாசலப்பிரதேசம் சென்று அங்குள்ள சுவாமியைச் சந்தித்தார். அடுத்து ரிஷிகேஷ் சென்று தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இருந்த சுவாமியைப் பார்த்து ஆசீர்வாதம் பெற்றார். அதன்பின் அவருக்கு விருப்பமான ஸ்தலமான இமயமலை சென்றார். அங்குள்ள பாபா குகையில் தியானம் செய்தார்.

அங்குள்ள பிரசித்திபெற்ற, தெய்வாம்சம் பொருந்திய ஆலயங்களுக்குப் பிரவேசித்து வழிபட்டார். தனது ஆன்மிகப் பயணத்தை 10 நாள்களில் முடித்துக்கொண்ட ரஜினி இன்று காலை 11 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட்டுவிட்டார். இன்று மதியம் 2 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்குகிறார் ரஜினி. அங்கிருந்து கார் மூலம் போயஸ்கார்டன் புறப்பட்டுச் செல்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க