`மத்திய அரசுக்கு பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கூஜா தூக்குகிறார்கள்' - ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய த.மா.கா நிர்வாகிகள் | Edappadi Palanisamy and O.Palanisamy are under modi control, says TMC cadres

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (20/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (20/03/2018)

`மத்திய அரசுக்கு பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கூஜா தூக்குகிறார்கள்' - ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய த.மா.கா நிர்வாகிகள்

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கூஜா தூக்கிக்கொண்டிருக்கிறார்கள்" என்று ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா-வினர் கொந்தளித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் விவசாயp பிரச்னைகளை தீர்க்கக்கோரியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் அருண் பிரகாஷ், ''தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி, மக்களுக்கு துன்பங்களை விளைவிக்கும் ஆட்சியாக இருந்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மோடி அரசிடம் பறிகொடுத்து வருகிறார்கள்.

மத்திய மோடி அரசு தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையைப்போல பார்க்கிறது. முதல்வர் பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல் பதவி பிரச்னையிலேயே இருந்து வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கூஜா தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். உள்ளாட்சித் தேர்தல் வந்தால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க தோற்றுவிடும் என்ற காரணத்தால் சுயநலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் செய்துவருகிறார்கள். உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பொது மக்கள் பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க