ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு.. எதிர்ப்பு..! திசைமாறும் மக்கள் போராட்டம்

துாத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கான ஆதரவும் எதிர்ப்பும் நிஜமான போராட்டக்காரர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. 

sterlite plant

‛வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்கு, அந்நிறுவனம் அரசிடம் அனுமதி வாங்கி, விரிவாக்க பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

protest against sterlite

பல அரசியல் தலைவர்களும், அவ்வப்போது இந்த எதிர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர். சில காலம் அமைதியாக இருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், தற்போது மீண்டும் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. இந்த ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர். அடுத்த சில நாட்களில், என்.ஜி.ஓ.,க்களை சேர்ந்த மகளிர் குழுவினர் சிலர், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்க வேண்டும் என எதிர் மனு கொடுத்தனர். ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள், தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். பின், குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குழந்தைகளுடன் போராட்டக்காரர்கள் போலீசாரால் கைது செய்ய போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்த  பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, திட்டமிட்டவர்கள் மதுரைக் கிளையில் அனுமதி பெற்று, வரும் 24-ம் தேதி, பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறன. போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் பற்றி பரப்பபடும் எதிர்மறை கருத்துக்கள் போராட்டத்தின் வீரியத்தை கேள்விளக்குள்ளாக்குகின்றன. பேரணி நடைபெற உள்ள நாளில் துாத்துக்குடியில் கடையடைத்து ஆதரவு தருவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்த நிலையில், விக்ரமராஜா தலைமையிலான வணிகர் சங்கள் ஆதரவு தரவில்லை.  

துாத்துக்குடி மக்ககளின் வாட்ஸ் அப்களில் கடந்த ஒரு வாரத்தில், ஸ்டெர்லைட் ஆதரவு செய்திகள் விரும்பியும், எதிர்ப்பு செய்திகள் வம்படியாகவும் பரப்பப்பட்டு வருகின்றன. போராட்டகாரர்களுக்கு எதிராக வலம் வரும் இந்த கிண்டல் செய்திகளால், உண்மையாக போராடும் மக்களின் கோரிக்கைகள் காற்றில் பறக்க விடப்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!