வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (21/03/2018)

கடைசி தொடர்பு:07:20 (21/03/2018)

மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா - இன்று கோலாகல தொடக்கம்!

சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா மார்ச் 21- ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2-ம்தேதி வரை நடைபெறுகின்றது. 21-ம் தேதி கோலவிழி அம்மன் கோயிலில் கிராமதேவதை வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. 22 -ம் தேதி கொடியேற்றம், 24 -ம் தேதி  அதிகார நந்தி சேவையும், 28 -ம் தேதி காலை 6 மணிக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. 

 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா 29-ம் தேதி நடைபெறுகிறது. அன்று (வியாழன்) மதியம் 3.30 மணிக்கு, வெள்ளி விமானத்தில் எழுந்தருளும் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருவீதியுலா வரும் வைபவம் நடைபெறுகிறது.  மயிலையின் மகத்தான இந்தத் திருவிழாவை தரிசிக்க சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். ஏப்ரல் 2-ம் தேதி திங்கட்கிழமை விழா நிறைவுபெறுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க