'மாநிலம் தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்' - எச்சரிக்கும் த.மா.கா!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி த.மா.கா இளைஞரணி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

த மா காதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மாநில காங்கிரஸ் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்தரன், மாநகர் மாவட்ட தலைவர் நந்தா செந்தில்வேல்,தெற்கு மாவட்ட தலைவர் குணா ஆகியோர் தலைமை வகித்தனர். அடுத்து தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணி  திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர்கள்  ராஜீவ் காந்தி,தனசேகர், விக்னேஷ், அக்கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இன்டர்நெட் ரவி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். 

போராட்டத்தில் த.மா.கா-வினர், "ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட கோரியும், பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் ஏற்றகூடாது என்றும், தமிழக மக்களை வஞ்சிக்ககூடாது என்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அதன் வரியை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவேண்டும். 2016-17-ம் ஆண்டுக்கான நெற்பயிற் காப்பீட்டுக்கான நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராடினர்.    

6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை எனில் மாநிலம்தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்று கூறினர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!