வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (21/03/2018)

கடைசி தொடர்பு:12:45 (21/03/2018)

2ஜி மேல்முறையீட்டு வழக்கு: கனிமொழி ஆ.ராசாவுக்கு நோட்டீஸ்

2ஜி வழக்கு முறைகேடு தொடர்பாக, மீண்டும் கனிமொழி மற்றும் ராசா ஆகிய இருவருக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கனிமொழி

2ஜி அலைக்கற்றை வழக்கில், முறைகேடு செய்ததாகக் கனிமொழி, ஆ.ராசா உட்பட 19 பேர்மீது சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ தாக்கல் செய்த ஆதாரங்கள் அனைத்தும் போதியதாக இல்லை என்று கூறி, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலைசெய்து உத்தரவிட்டது. 

2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோரின் விடுதலையை எதிர்த்து, கடந்த 19-ம் தேதி அன்று, அமலாக்கத்துறை முதலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, இவர்களின் விடுதலையை எதிர்த்து, சி.பி.ஐ-யும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 

இன்று, இம்மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அமர்வு முன் வாதத்திற்கு வந்தது. இதையடுத்து, கனிமொழி மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.