'ஆண்டவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்'- ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச்சு

''தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க ஆண்டவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்'' என ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினி காந்த் பேசினார். 

ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 31-ம் தேதி, அரசியலில் இறங்கப்போவதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்திருந்தார். அதன்பின், தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 'ரஜினி மக்கள் மன்றம்' என மாற்றியமைத்தார். இதைத் தொடர்ந்து, மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் முழுமையாக ஈடுபட்டுள்ளார், ரஜினி. தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களையும் தனித்தனியே சந்தித்து, அரசியல் தொடர்பான கருத்துகளையும் தனது மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்துவருகிறார்.

இதன்படி இன்று, தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த் பேசிய ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''அரசியல் மாற்றத்தை உருவாக்க ஆண்டவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். முழுமையாக நாம் மாற்ற வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையோடு இருக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!