வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (21/03/2018)

கடைசி தொடர்பு:15:10 (21/03/2018)

'என்னைப் புகழ வேண்டாம்!' - பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் கடுகடுத்த ஸ்டாலின்

சட்டப்பேரவை விவாதத்தின்போது, தன்னைப் புகழ வேண்டாம் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

இன்று, சட்டப்பேரவையில் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அதில், தமிழக
அரசின் செயல்கள் மற்றும் திட்டங்கள்குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிவருகின்றன. இதனால், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிடுகின்றன. இன்றைய விவாதத்தின்போது பேசிய ஸ்டாலின், சட்டசபையில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம். இதனால், வீணாக நேரம் மட்டுமே விரயமாகிறது. எம்.எல்.ஏ-க்கள், மக்கள் பிரச்னைகள்குறித்து மட்டுமே பேசினால் போதும் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு, மத்திய அரசுக்குப் போதிய அழுத்தம் தரவில்லை. உங்களால் முடியவில்லை என்றால், காவிரி விவகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள்'' என ஆவேசமாகக் கூறினார். இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்தபோது தி.மு.க என்ன நடவடிக்கை எடுத்தது எனக் கேள்வி எழுப்பினார்.  அதன்பின், பேரவையில் காரசாரமான விவாதம் தொடர்ந்தது.