'14 வங்கிகளில் ரூ.824 கோடி கடனை செலுத்தவில்லை'- கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது சி.பி.ஐயில் புகார் | sbi bank has complaint cbi for kanishk gold defrauds

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (21/03/2018)

கடைசி தொடர்பு:17:48 (21/03/2018)

'14 வங்கிகளில் ரூ.824 கோடி கடனை செலுத்தவில்லை'- கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது சி.பி.ஐயில் புகார்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், கனிஷ்க் கோல்டு நகை தயாரிப்பு நிறுவனம் ரூ.215 கோடி கடன் பெற்று, அக்கடனை திரும்பச் செலுத்தாமல், மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சி.பி.ஐ-யிடம் எஸ்.பி.ஐ புகார் அளித்துள்ளது. 

ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நகை தயாரிப்பு நிறுவனம் கனிஷ்க் கோல்டு. இந்நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்காக ஒப்புதல் கடிதத்தை எஸ்.பி.ஐ வங்கி வழங்கியுள்ளது. இவ்வாறு இருக்கையில், வங்கியில் பெற்ற கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை என எஸ்.பி.ஐ வங்கி சி.பி.ஐ-யிடம் புகார் அளித்துள்ளது. 

அதில், சென்னை, தி.நகரில் உள்ள கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிட் எனும் தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயின் ஆகியோர், எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளிடம் ரூ. 747 கோடி கடன் பெற்றுள்ளனர். இதில், எஸ்.பி.ஐ. வங்கியிடம் மட்டும் ரூ.215 கோடி கடன் பெற்றுள்ளனர்.  கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள், இதுவரையிலும் 14 வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இவர்கள், மொத்தம் ரூ.824 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி.ஐ. வங்கி சி.பி.ஐ - யிடம் புகார் அளித்துள்ளது. 

இதேபோன்று, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி கடன் பெற்று, கடனிற்கான வட்டித் தொகை மற்றும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக நிரவ் மோடி மீது பி.என்.பி., வங்கி சி.பி.ஐ-யிடம் புகார் தெரிவித்தது. இந்த வங்கி மோசடி குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியும் கடன் மோசடி புகாரை அளித்துள்ளது.