நாடாளுமன்றம் முன்பு தொடர் உண்ணாவிரதம்..! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு | Farmers association announced, continues fasting protest from March 23

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (21/03/2018)

கடைசி தொடர்பு:22:20 (21/03/2018)

நாடாளுமன்றம் முன்பு தொடர் உண்ணாவிரதம்..! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு மார்ச் 26-ம் தேதியிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பி.ஆர்.பாண்டியன்

இதுகுறித்து தெரிவித்துள்ள காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், 'காவிரி நதி நீர் பங்கீட்டை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டது. அதனை பின்பற்றி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு வேண்டுமென்றே இதனை அலட்சியப்படுத்தி, காலதாமதப்படுத்தி வருகிறது. மார்ச் 29-ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாடாளுமன்றம் முன்பு மார்ச் 26-ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என்று தெரிவித்தார்.