வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (22/03/2018)

கடைசி தொடர்பு:07:00 (22/03/2018)

பள்ளி ஆண்டுவிழாக்களுக்கு புதிய விதிகள் - தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளி

இந்த மாதம் 16-ம் தேதி, திருநெல்வேலி, களக்காடு ஒன்றியம் ஏர்வாடி கிராமத்தில், அரசு உதவிபெறும் எஸ்.வி.இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், அதிக அளவு சோடியம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், விழாவில் கலந்துகொண்ட பல மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கண்பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் தொடக்கக்கல்வி இயக்குநர், அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் மழலையர், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாடும்போது கடைப்பிடிக்க வேண்டிய நான்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார். 

1. ஆண்டுவிழா மாலை 6 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
2. விழாவின்போது, அதிக ஒலிகொண்ட ஒலிப்பெருக்கி மற்றும் அதிக ஒளிகொண்ட மின் விளக்குச் சாதனங்களைப் பயன்படுத்தக்   கூடாது. 
3. விழா நடைபெறும் இடம், மாணவர்களுக்குப் பாதுகாப்பானதாகவும் எளிதில் மாணவர்கள் வெளியே சென்றுவர ஏதுவாகவும் இருத்தல் வேண்டும். 
4. விழா நடைபெறும் முன், விழா மேடை, மாணவர்கள் இருக்கை, விழாவுக்குப் பயன்படுத்தப்படும் ஒளி,ஒலி சாதனங்கள் ஆகியன அமைத்தல்குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். 

இந்தப் புதிய விதிமுறைகளைப் பின்பற்றும்படி மாவட்டத் தொடக்கக்கல்வி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.