வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (22/03/2018)

கடைசி தொடர்பு:14:35 (22/03/2018)

சார்ஜர் போட்டபோது விபரீதம் - இரவில் வெடித்துச் சிதறிய பைக் 

 பைக்

சென்னையில் பேட்டரியில் இயங்கும் டூவிலருக்கு சார்ஜர் போட்டபோது அது, வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னை, திருவான்மியூர் காமராஜர் நகர் தெற்கு அவன்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் சங்கரநாராயணன் என்பவர் குடியிருக்கிறார். இவரிடம் மின்சாரத்தில் பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர வாகனம் உள்ளது. இந்த வாகனத்துக்கு சங்கரநாராயணன் வீட்டில் வேலைபார்க்கும் முருகன் என்பவர் நேற்றிரவு சார்ஜர் போட்டுள்ளார்.

சார்ஜர் போட்ட சில நிமிடங்களிலேயே இருசக்கர வாகனம் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஜன்னல், கதவு ஆகிய பகுதிகளில் தீ பரவியது. இதனால் முருகன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து திருவான்மியூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.