வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (22/03/2018)

கடைசி தொடர்பு:15:50 (22/03/2018)

’நல்லா பேசுறீங்க முதல்வரே..!’ - சட்டசபையில் கலகலத்த துரைமுருகன்

'பழனிசாமி இப்போது மிகவும் நன்றாகப் பேசுகிறார்' என தமிழக முதல்வரை, சட்டசபையில் விமர்சித்து பேசியுள்ளார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன். 

துரைமுருகன்

சமீபத்தில், 2018-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'அ.தி.மு.க ஆட்சியில்தான் பெரும்பாலான ரவுடிகளைக் கைதுசெய்தோம். தி.மு.க ஆட்சியில் ரவுடிகள்மீது இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று தி.மு.க-வை சாடினார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,  ''எங்கள் ஆட்சியில் நாங்கள் ரவுடிகளைக் கைதுசெய்யவில்லை என்றாலும், ரவுடிகள் அனைவரும் ஒன்றுகூடி 'கேக் வெட்டி' கொண்டாடியது, இந்த அ.தி.மு.க ஆட்சியில்தானே.  எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது, இவ்வாறு எல்லாம் பேச மாட்டார், ஆனால் இப்போது மிகவும் நன்றாகப் பேசுகிறார்'' என்று கலாய்க்கும் விதத்தில் விமர்சித்துள்ளார்.