வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (22/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (22/03/2018)

வரிஏய்ப்பு புகார் எதிரொலி: அரசு ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் ஐ.டி சோதனை

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஆர்.பாலகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஆர்.பி.ஆர். என்ற பெயரில் குமரி மாவட்டத்தில் பல நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவர் வருமானத்துக்கு அதிகமாக வரிஏய்ப்பு செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆர்.பாலகிருஷ்ணனின் மீன் வலை உற்பத்திக் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட  ஏழு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.