சென்னை டி.ஜி.பி. ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் கைது! | Two cops who were trying to commits suicide arrested

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (22/03/2018)

கடைசி தொடர்பு:17:20 (22/03/2018)

சென்னை டி.ஜி.பி. ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் கைது!

காவல்துறைத் தலைவர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் ரகு, கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தீக்குளிக்க முயன்ற காவலர்கள்

தேனி மாவட்டத்தில் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றிவரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அதன்பின்னர், வெளியே வந்த அவர்கள் திடீரென மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் அவர்கள், `பணியாற்றும் இடத்தில் சாதிரீதியாகப் பாகுபாடு காட்டப்படுகிறது.

மேலும், காரணம் இல்லாமல் பணியிட மாற்றம் செய்துள்ளனர்’ என்று குற்றம்சாட்டினர். இந்த நிலையில், தற்கொலைக்கு முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலர்கள் ரகு, கணேஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.