கனிஷ்க் கோல்டு நிறுவன அதிபர் பூபேஷ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்! | Look out notice sends to Kanishk gold firm owner Boobesh Kumar by CBI

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (22/03/2018)

கடைசி தொடர்பு:18:43 (22/03/2018)

கனிஷ்க் கோல்டு நிறுவன அதிபர் பூபேஷ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!

சென்னை கனிஷ்க் கோல்டு நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமாருக்கு சி.பி.ஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் அவரின் மனைவி நீதா ஜெயின் ஆகியோர் எஸ்.பி.ஐ உள்ளிட்ட 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் உள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தது. அதையடுத்து, கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் உள்ளிட்டோர்மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. அவர்களிடம் பெங்களூருவில் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணை முடிவடைந்திருக்கும் நிலையில், பூபேஷ் குமார் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கனிஷ்க் நிறுவன இயக்குநர்களுக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.