சிவகாசி அருகே பேப்பர் ஆலையில் தீ விபத்து!

சிவகாசி அருகே சுக்கிரார்பட்டியில் பேப்பர் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

சிவகாசி பேப்பர் ஆலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சுக்கிரார்பட்டியில் ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான "ஸ்ரீபதி" என்ற பெயரில் இயங்கும் அட்டை பெட்டி மற்றும் பேப்பர் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் பேப்பர் கூழ் தயாரிக்கும் இடத்தில் பழைய கழிவு பேப்பர் இருக்கும் இடத்தில் தீடிரென லேசான தீப்பற்றி புகை வந்தது. அந்தத் தீயை அணைப்பதற்குள், அருகிலுள்ள இடங்களுக்கும் தீ பரவியது.

தீ பரவுவதைக் கண்ட தொழிலாளிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளமென பரவியது. இதையடுத்து, உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கழிவு பேப்பர்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதில் தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் டி.எஸ்.பி கண்ணன் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!