ஆண்டுக்கு 1,50,000 லிட்டர்... மழைநீர் சேகரிப்பில் புதிய யுக்தியைக் கையாளும் தாயுமானவன்!

ஒவ்வொரு வீட்டிலும் கொல்லைப்புறம், முற்றம், வாசல் என எங்கெல்லாம் திறந்தவெளி இருக்கிறதோ, அங்கெல்லாம் பாத்திரங்களை வைத்து மழைநீர் சேமிக்கும் வழக்கம் இருந்தது.  தற்போது போர்வெல்லை மட்டுமே முழுமையாக மக்கள் நம்பிருக்கிறார்கள். இதனால் நிலத்தடிநீர் மாயமாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க மழைநீர் சேகரிப்பு நிலையம் அமைத்துள்ளார், நாகப்பட்டினம் தெகட்டூரைச் சேர்ந்த தாயுமானவன். இதன் கொள்ளளவு 65,000 லிட்டர். ஆண்டுக்கு 1,50,000 லிட்டர் மழைநீர்சேமிக்கலாம்.

எங்க வீட்டோட மொட்டைமாடி 2000 சதுர அடி. இதோடு, 300 சதுர அடியில் ஓட்டுக் கட்டடம் இருக்கு. தரைத் தள வெற்றிட வளாகம் 200 சதுர அடி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 2,500 சதுர அடி. மொட்டை மாடியில் விழக்கூடிய மழைநீரை, எல்லா வீடுகள்லயும் உள்ள மாதிரி வழக்கான குழாய் அமைத்து, தரையில வந்து விழுமாறு செஞ்சிருக்கோம். தண்ணீர் வெளியேறாம இருக்க, வீட்டைச் சுற்றிலும் எல்லா பக்கங்கள்லயும் ஒரு அடி உயரத்துக்கு தடுப்பு அமைச்சிருக்கோம். எல்லா தண்ணீரும் ஒரே இடத்துக்கு வந்து சேரக்கூடிய வகையில் வாட்டம் அமைச்சிருக்கோம்.

மழைநீர்

இங்கிருந்து 100 அடி நீளத்துக்கு 6 இன்ச் குழாய் அமைச்சு, மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்கு தண்ணீரைக் கொண்டுபோறோம். மொட்டை மாடி உள்ளிட்ட  நீர்ப்பிடிப்புப் பகுதிகளை எப்போதுமே தூய்மையா இருக்குற மாதிரி பராமரிக்கிறோம். குழாய்மூலம் கொண்டு போகக்கூடிய தண்ணீரை வடிகட்டி சேமிக்க, 24 அடி நீளம் 11 அடி அகலம் 10 அடி உயரம்கொண்ட சிமென்ட் தொட்டி அமைச்சிருக்கோம். இதுக்கு மேல, நடுப்பகுதியில் 11 அடி நீளம் 10 அடி அகலம் 3 அடி உயரம்கொண்ட வடிகட்டும் அமைப்பு அமைச்சிருக்கோம். குழாய்மூலம் கொண்டு வரக்கூடிய தண்ணீர், இந்த வடிகட்டும் அமைப்புக்கு வந்து, ஆற்றுமணல், கூழாங்கல், வேலிக்கருவை கரித்துண்டுகள், சிறு ஜல்லி, பெரு ஜல்லி எனப் பல நிலைகளில் வடிகட்டப்படுகிறது  என்கிறார்.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!