'அ.தி.மு.க அலுவலகத்துக்கு இதற்காகத்தான் சென்றேன்' - தீபா கணவர் மாதவன் `ஓப்பன் டாக்' 

மாதவன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அவருக்கு வாழ்த்து சொல்ல தீபாவின் கணவர் மாதவன், அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு சாதனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பினர் வெகுசிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஓராண்டு சாதனைகள் குறித்த தமிழக அரசு சார்பில் பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தீபாவின் கணவர் மாதவன், அ.தி.மு.க அலுவலகத்துக்குத் திடீரென இன்று முற்பகல் வந்தார். அ.தி.மு.க அலுவலகத்துக்கு வந்த அவர், முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அ.தி.மு.க அலுவலகத்திலிருந்தவர்கள், முதல்வர் இங்கு இல்லை. அவர் வந்தவுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மாதவனிடம் பேசினோம். "முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனால், முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றேன். அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் இல்லை. இதனால், அவரைப் பிறகு சந்திப்பேன்" என்றவரிடம் முதல்வரைச் சந்திப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, பிறகு விரிவாகப் பேசுகிறேன் என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!