சென்னைக் குடிநீர்: ஆமை வேகத்தில் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம்! | Jayalalithaa's dream project Kannankottai reservoir work goes slowly

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (23/03/2018)

கடைசி தொடர்பு:15:00 (23/03/2018)

சென்னைக் குடிநீர்: ஆமை வேகத்தில் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம்!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்ய கட்டப்பட்டுவரும் கண்ணண்கோட்டை நீர்த்தேக்கப் பணிகள், ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகிறது. 

கண்ணன்கோட்டை நீர்தேக்கம்

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம்,  புழல், பூண்டி , வீராணம் ஏரிகளிலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் பெறப்படுகிறது. கோடைக்காலத்தில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு  காரணமாக, அதிக விலை கொடுத்து லாரித் தண்ணீர் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். வருங்காலத்தில், சென்னை நகரின் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு, சென்னை நகருக்கு அருகில், புதிய நீர்த்தேக்கம் கட்ட  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முடிவுசெய்தார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள கண்ணன்கோட்டையில், ரூ.330 கோடியில் புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டுவருகிறது. கட்டுமானப்பணிகள் 2013- ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியும்  நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால் நீர்த்தேக்க கட்டுமானப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  

கண்ணன்கோட்டை நீர்த்தேக்க கட்டுமானப்பணிகள்குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த துரைமுருகன், சட்ட மன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''அணை கட்டுமானப் பணிகள் அதிவேகத்தில் நடைபெற்றுவருகிறது. ஆந்திராவிலிருந்து 4.5 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர் பெற, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2.5 டி.எம். சி தண்ணீர் தர அவர்கள் முன் வந்துள்ளனர் '' என்று பதில் அளித்தார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கமும் ஒன்று. ராஜநேரி, தீர்வைகண்டிகை ஏரிகளை இணைத்து நீர்தேக்கம் கட்டப்படுகிறது.  1,252.47 ஏக்கர் பரப்பளவில்  அமையும் அணையால், 740 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நீர்தேக்கத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாமரைக்குப்பம், செஞ்சி, அகரம் வழியாக கால்வாய் வெட்டப்படுகிறது. இந்தக் கால்வாய், கண்டலேறு- பூண்டி கால்வாயில் ஜீரோ பாயின்ட்டுடன் இணைக்கப்பட்டு, அங்கிருந்து கண்ணன்கோட்டை நீர்தேக்கத்துக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டு வரப்படும்.  ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காடுகளில் உள்ள ஓடைகளில் இருந்தும் இந்த அணைக்கு நீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை அமைந்தால், சென்னை நகரின் குடிநீர் தேவை முழுமையாகப் பூர்த்தியாகும். தற்போது, நாள் ஒன்றுக்கு 600 மில்லியன் குடிநீர் சென்னை நகருக்கு சப்ளை செய்யப்படுகிறது. தேவை, 830 மில்லியன் லிட்டர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close