வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (23/03/2018)

கடைசி தொடர்பு:15:15 (23/03/2018)

கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் என்ன ஸ்பெஷல்?

கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சியில், 2018-19-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன் இன்று தாக்கல்செய்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், கோவை மாநகராட்சியின் தனி அதிகாரியாகச் செயல்பட்டுவரும் ஆணையாளர் விஜயகார்த்திகேயன், வரவு-செலவுத் திட்டங்களை இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல்செய்தார். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "2018-19-ம் நிதி ஆண்டில், மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் 1274.91 எனவும், வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள்  1257.17 கோடி  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 2018 - 19-ம் நிதி ஆண்டில், நிகர உபரி 17.74 கோடி  எனவும், கடந்த ஆண்டுத் திட்டங்களின் நிலைகுறித்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரம் திறன்மிகு நகரமாகவும், கோவையில் உள்ள எட்டுக் குளங்களைப் புனரமைத்து மேம்பாடுசெய்தல் மற்றும் மோட்டார் பயன்பாடு அல்லாத பாதை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அம்ரூத் திட்டத்தின் கீழ், பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டம்மூலம் நாளொன்றுக்கு சுமார் 125 எம்.எல்.டி குடிநீர் மற்றும் சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் நாளொன்றுக்கு 75 எம்.எல்.டி மொத்தம் 200 எம்.எல்.டி கிடைக்க இருப்பதைக் கருத்தில்கொண்டு, எல்லை விரிவாக்கத்துக்கு முன்பிருந்த மாநகராட்சிப் பகுதிகளில்,  24 மணி நேரமும் தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படும் எனவும் தூய்மை பாரதத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக கோவை மாநகராட்சி மாற்றப்படும்.  மழைநீர் சேகரிப்புத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றவரிடம், வரிகள் அதிக்கப்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுவதாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, ''வரிகள் அதிகப்படுத்தவில்லை'' என்று பதிலளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க