Published:Updated:

பக்கத்து வீட்டில் விளையாட்டு... 12 வயதுச் சிறுவனுக்கு கொரோனா - அரியலூரில் சீல் வைக்கப்பட்ட கிராமம்

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

கொரானோ தொற்று இல்லாத ஒருவரின் மெடிக்கல் சாப்பில் வேலைபார்த்த பெண்கள் இருவருக்குக் கொரானோ தொற்று இருப்பது கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.

அரியலூரில் 12 வயதுச் சிறுவன் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சிறுவனின் குடும்பம் மற்றும் அந்தக் கிராமம் முழுவதையும் போலீஸார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அரியலூர் அரசுமருத்துவமனை
அரியலூர் அரசுமருத்துவமனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள 5 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படாததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களதுளின் உறவினர்கள் மற்றும் கடைகளில் வேலைபார்த்த 28 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் தொற்று இல்லாத ஒருவரின் மெடிக்கல் ஷாப்பில் வேலைபார்த்த பெண்கள் இருவருக்குக் கொரானோ தொற்று இருப்பது கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. செந்துறை, ராயபுரம் கிராமத்தில் வசித்த இரு பெண்களையும் இரவோடு இரவாகப் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதித்தனர்.

சிறுவன்
சிறுவன்

இந்தநிலையில், அதே ராயபுரத்தில் பெண் மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 12 வயதுச் சிறுவனுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறுவன் அந்த வீட்டிற்கு சென்று விளையாடியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ராயபுரம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக அறிவிக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு
கிருமி நாசினி தெளிப்பு

அதிகாரிகள் சார்பில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தநிலையில் ராயபுரம் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏற்கெனவே செந்துறை பகுதியில் இரண்டு பேருக்குக் கொரோனா உள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது

அடுத்த கட்டுரைக்கு