Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:`அந்த 13 பேரின் இழப்பை ஈடுகட்ட முடியாது!’ - 3-ம் ஆண்டு நினைவுதினம்

நினைவஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் நினைவாக 3-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இன்று 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:`அந்த 13 பேரின் இழப்பை ஈடுகட்ட முடியாது!’ - 3-ம் ஆண்டு நினைவுதினம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் நினைவாக 3-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இன்று 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Published:Updated:
நினைவஞ்சலி

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு, ஆலைக்குப் பின்புறமுள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் முதலில் மக்களின் போராட்டம் தொடங்கியது. பின்னர், அடுத்தடுத்த கிராமங்களில் மக்கள், தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மக்களின் போராட்டத்தன்று, கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

நினைவஞ்சலி
நினைவஞ்சலி

இன்று, உயிரிழந்தவர்களின் நினைவாக 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டது. ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற கிராமங்களில் மெழுகுவத்தி ஏந்தி மக்கள் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க வடக்கு மண்டல அலுவலகக் கூட்ட அரங்கில், தூத்துக்குடி எம்.பி கனிமொழி, மகளிர் உரிமைநலன் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல, பல கட்சியைச் சேர்ந்தவர்களும் நினைவஞ்சலி செலுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினரிடம் பேசினோம். “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்களைவிட்டுப் பிரிந்த 13 பேரின் இழப்புகளுக்கு ஈடுகட்ட முடியாது. தங்களின் குடும்பத்தின் ஆணிவேர், பக்கவேர் போன்றவர்களையெல்லாம் அந்தத் துப்பாக்கிச்சூட்டில் பறி கொடுத்திருக்கிறோம். அவர்களின் உயிரிழப்புக்கு தற்போது வரை நீதி எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஆலை எப்போது தூத்துக்குடி மண்ணிலிருந்து அகற்றப்படுமோ அப்போதுதான் அவர்களின் ஆன்மா நிம்மதி அடையும்.

வீர வணக்க அஞ்சலி
வீர வணக்க அஞ்சலி

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோலவே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவர், காயம்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ’சட்டமன்றத்தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்றி ஆலையை அகற்ற வேண்டும்’ என்ற எங்களின் கோரிக்கையின்படி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூத்துக்குடி எம்.பி கனிமொழி, “தி.மு.க ஆட்சி அமைந்த 17 நாள்களில் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோலவே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவர், பாதிக்கப்பட்டவர்கள் என 17 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையின்படி, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், மத்திய புலனாய்வுத்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளைத் தவிர ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சமும், விசாரணைக் காலத்தில் மரணமடைந்த ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் நிவாரணத் தொகை வழங்கப்படும் பரிந்துரையும் நிறைவேற்றப்படும்.

பாதுக்காப்பு பணியில் போலீஸார்
பாதுக்காப்பு பணியில் போலீஸார்

அத்துடன், போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் தடையில்லாச் சான்றுகள் வழங்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தி.மு.க ஒருபோதும் துணை நிற்காது” என்றார். ஸ்டெர்லைட் ஆலை, ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள், முக்கியச் சாலைகள் என தூத்துக்குடி முழுவதும் ஆறு மாவட்டங்களிலிருந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 12 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 55 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism