`கனிமொழியை வெளியேற்றத்தான் இந்தச் சூட்சுமம்!' - ஸ்டாலினைச் சாடிய தம்பிதுரை | thambidurai said Stalin has a plan to out kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (23/03/2018)

கடைசி தொடர்பு:17:03 (23/03/2018)

`கனிமொழியை வெளியேற்றத்தான் இந்தச் சூட்சுமம்!' - ஸ்டாலினைச் சாடிய தம்பிதுரை

நாடாளுமன்ற வளாகத்தின்முன் தொடர்ந்து 15 வது நாளாகப் போராடி வரும், அ.தி.மு.க எம்.பி-க்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

தம்பிதுரை

மேலும், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அ.தி.மு.க அரசு ஆதரிக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவிப்பது அவரின் சொந்தக் கருத்து. அ.தி.மு.க சார்பில் 37 உறுப்பினர்கள்தான் இருக்கிறோம். நாங்கள் எப்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியும். அதற்கு 54 பேர் தேவைப்படுகின்றனர். ஸ்டாலினுக்குத் தெரிய வேண்டும். இது முடியுமா முடியாதா என்று.

தமிழகத்தை வஞ்சிக்கும் ஆந்திர அரசுக்கு ஆதரவாகச் செயல்படுமாறு கூறுகிறார். அதுமட்டுமின்றி, காவிரி மேலாண்மை அமைப்பதற்கு, மற்ற கட்சியின் ஆதரவு கிடையாது. அ.தி.மு.க-வுக்கு அடுத்து அதிக உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், `கனிமொழியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே, ஸ்டாலின் எம்.பி-க்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார். இது அவரின் அரசியல் சூட்சுமம். அதனால், வரும் 29-ம் தேதி வரை பொறுத்திருப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தொடர்ந்து போராடுவோம் எனப் பேசினார்.
 


[X] Close

[X] Close