`தஞ்சை ஃபேன்ஸி ஸ்டோரில் தீ விபத்து!’ -10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுல்தான் ஜியப்பா சந்தில் உள்ள ஃபேன்ஸி பொருள்கள் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் கருகின.

தீ விபத்து

சுல்தான் ஜியப்பர் சந்தில் ஏராளமான ஃபேன்ஸி மற்றும் பிளாஸ்டிக் கடைகள், காலணிகள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை  உள்ளன. இந்நிலையில் பாபு ராம் என்பவர் தனது கடைக்குக் கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகளைக் கடைக்குள் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் இவரது கடைக்குள்ளிருந்து தீப்பற்றி எரிந்திருக்கிறது. இந்தத் தீ அருகிலுள்ள கடைகளுக்கும் பரவியுள்ளது. இதில் விலையுயர்ந்த செருப்புகள், ஃபேன்ஸி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து கருகியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வணிகர்கள் தீயை அணைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள், தீயைப் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தஞ்சை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தத் தீ விபத்து அப்பகுதி வியாபாரிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!