`பென்சன் தவறாகக் கணக்கிடப்படுகிறது!’ - கிராம உதவியாளர் தொடர்ந்த வழக்கில் ஆட்சியருக்கு நோட்டீஸ் | HC bench issues notice to Madurai collector over Pension issue

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (23/03/2018)

கடைசி தொடர்பு:23:30 (23/03/2018)

`பென்சன் தவறாகக் கணக்கிடப்படுகிறது!’ - கிராம உதவியாளர் தொடர்ந்த வழக்கில் ஆட்சியருக்கு நோட்டீஸ்

பென்சன் தொகை தவறாகக் கணக்கிடப்பட்டு வழங்கப்படுவதாக ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

பென்சன் தொடர்பாக வழக்குத் தொடர்ந்த அழகு

மதுரை கண்ணேந்தல் பகுதியில் வசித்துவரும் ந.அழகு என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை அளித்தார் அதில் ``மதுரை திருப்பாலை சிறுதூரில் கிராம உதவியாளராக கடந்த 1973-ம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்ந்து 2012-ம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். ஆனால், எனக்கு முறையாக வழங்கவேண்டிய பென்சனை 1995-ம் ஆண்டில்தான் பணி நிரந்தரம் பெற்றதாகக் கூறி மாற்றிக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன் காரணத்தால் எனது பென்சன் தொகை 1995 ஆண்டிலிருந்தே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது . இதை ஏற்றுக்கொள்ளமுடியாது அதிகாரிகளின் தவறான கணக்கீட்டால் எனது பென்சன் தொகை மிகவும் குறைந்துள்ளது. எனது முதிய வாழ்க்கையில் எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பென்சன் தொகை கிடைக்கவில்லை என்பதால் நான் மிகவும் கஷ்டப்பட்டுவருகிறேன் எனது அடிப்படை தேவைகளையும், மருத்துவத் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியவில்லை. இதன் காரணத்தால் பல முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை எனது மனு பரிசீலனை செய்யப்பட்டதா என்று கூட தெரியவில்லை ஆகையால் எனது பென்சனை, 1973ம் ஆண்டிலிருந்தே கணக்கிடப்பட வேண்டும். அதன் படி எனக்கு பென்சன் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டார். கிராம உதவியாளர் அளித்த மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.