அம்பலம் என்ற பட்டத்தை வைத்து கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபடக்கூடாது !

மதுரைக்கிளை

புதுக்கோட்டையை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் " புதுக்கோட்டை போசம்பட்டி எனது சொந்த ஊர், அம்பலம் என்ற முறை எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து இருந்துவருகிறது அவர்களுக்கு . அம்பலம் என்பவர்களுக்கு ஊர் மக்கள் பயந்து இருந்தனர். காலப்போக்கில் அந்த முறைகள் மாறி மக்கள் நீதிமன்றங்கள் வாயிலாக தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டனர்.ஆனால் போசம்பட்டியை சேர்ந்த உடையப்பன் என்பவர் தனது செல்வாக்கால் தன்னை ஊர் பெரியவர் என அவராக அறிவித்துக் கொண்டுள்ளார்.

அவருக்கு எதிராக யாராவது எதிர்த்துப் பேசினால் கூடக் காவல்துறையினரை தனது செல்வாக்கை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகிறார்.மேலும் இவருக்கு எதிராகச் செயல்படும் மக்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதுடன் 5 ஆயிரம்,10 ஆயிரம் என அபராதம் விதிக்கிறார். மேலும் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை ஊரின் சுப,துக்க நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ளக் கூடாது எனத் தடை விதிக்கிறார்.

கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் மக்களைச் சட்டை இல்லாமல் பல மணி நேரம் அனைவரின் முன்பாக நிற்க வைப்பதும்,அனைவரின் முன் நெடுஞ்சான் கடையாக விழுந்து கும்பிட சொல்வது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டார் தற்போது எனது உறவினர் சிலரையும் தாக்கினார் இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை எனவே சுதந்திர நாட்டில் தனது தானே அம்பலம் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்தமனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது இம்மனு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி.,யிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!