`பன்னீர்செல்வம் நீ்ங்கள் எலிதான்; யானை அல்ல'- கலாய்க்கும் டி.டி.வி.தினகரன் | T.T.V.Dinakaran slams ADMK government

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (24/03/2018)

கடைசி தொடர்பு:18:01 (24/03/2018)

`பன்னீர்செல்வம் நீ்ங்கள் எலிதான்; யானை அல்ல'- கலாய்க்கும் டி.டி.வி.தினகரன்

தமிழக அரசு சார்பில் நடைபெற்றது சாதனை கூட்டம் அல்ல. அது தமிழகத்துக்கு வந்த சோதனைக் கூட்டம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

டி.டி.வி. தினகரன்

தஞ்சாவூரில் பரிசுத்தம் நகரில் தங்கியிருக்கும் சசிகலாவைச் சந்திக்க டி.டி.வி.தினகரன் சென்றார். சசிகலாவைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `எடப்பாடி அரசு ஓராண்டு சாதனைக் கூட்டத்தை நடத்துகின்றனர். அது சாதனைக் கூட்டம் இல்லை. தமிழகத்திற்கு வந்த சோதனைக் கூட்டம். எலிகள் கூடி நடத்திய விழா அது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களைப் பயனாளிகளாக உட்கார வைத்து கொண்டு சாதனை கூட்டத்தை நடத்துகின்றனர்.

இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எலியான ஓ.பன்னீர்செல்வம் தன்னை யானையாக நினைத்துக்கொண்டிருக்கிறார். அவரை நினைத்து தமிழக மக்கள் நகையாடுகிறாகள். இந்த ஆட்சி விரைவில் கவிழும். ஓராண்டு சாதனை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசுவது வேடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பன்னீர்செல்வம் எதிராக வாக்களித்து விட்டு செப்டம்பர் மாதம் கட்சியில் துணை முதல்வர் பதவி பெற்றுக்கொண்டவர் சாதனையைப் பற்றி பேசிவருவது வேடிக்கையாக உள்ளது.

அம்மாவின் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி கொடுங்கோல் ஆட்சி. மக்களுக்கு விரோதமானது. இது விரைவில் முடிவுக்கு வரும். பொதுப்பணித்துறை பற்றி அனைத்தும் தெரியும் என்கிற ஓ.பன்னீர்செல்வம் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த கே.சி.பழனிச்சாமியே அவர் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி வருகிறார். சில டெக்னிக்கல் விஷயத்திற்காக ஸீலிப்பர் செல்கள் வெளியே வராமல் இருக்கிறார்கள்.

வாக்கெடுப்பு நடக்கும் போது கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள். மதவாத சக்திகளோடு எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம். பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள் நாங்களும் ஆள்வோம்' என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க